பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்று மூகூர்த்த நாள் என்பாதால் வேறு வழி இல்லை, தன் மனைவி திவ்யாவுடன் பேருந்தில் ஏறிக்கொண்டான் மோகன்.
கூட்ட நெரிசல் திவ்யாவையும் மோகனனையும் பிரிதத்து, திவ்யாவை ஓட்டுநர் இருக்கை அருகிலும் மோகனை பின்னேயும் நிற்க தள்ளி வைத்தது.
திவ்யாவை சுற்றி பெண்கள் அடர்ந்து நின்று கொண்டிருந்தார்கள் . மோகனனுக்கு சில தினகளுக்கு முன் ஒரு நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது .
'இந்த ஏரியா பஸ்களில் திருட்டு ஜாஸ்திடா... குறிப்பா பெண்கள்கிட்ட பொம்பளைங்களே திருடறாங்க... போன வாரம் கூட ஒரு பொண்ணோட செயினை திருடிட்டாங்க...' - இதுதான் மோகனிடம் அவனது நண்பன் சொன்னது .
குறுக்கில் அடிக்கடி வந்து இடையூறு செய்தவர்களைத் தாண்டி தாண்டி திவ்யாவின் ஆபர்ணங்களை கவனித்தான்.
பேருந்தில் முன் கண்ணாடி, வழியே வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த திவ்யாவின் மீது கோபம் கோபமாய் வந்தது மோகனுக்கு.
'என்ன பெண் இவள்... கொஞ்சம்கூட ஜாக்கிரதை உணர்வு இல்லாமல் இருக்கிறாளே !'
தன் கண்காணிப்பை மேலும் தீவரப்படுத்தினான் . அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. ஒருவழியாக தன் மனைவயின் நகைகளை
காபாற்றியாயிற்று என்ற திருப்தியுடன் திவ்யாவுடன் கீழே இறங்கினான் மோகன்.
"ஆமா நீ ஜாக்கிரதையாவே இறுக்க மாட்டியா ? இருபது பவுன் போட்டுகிட்டு ஜாலியா வேடிக்கை பாத்துகிட்டு வர்ற ?"
"ஏங்க, பஸ் நிறைய கூட்டம். தைரியமா யாராவது திருடுவாங்களா என்ன?"
"திவ்யா கூட்டம் கம்மியோ அதிகமோ நம்மகிட்ட இருக்கிற பொருட்கள் மேல நாமதான் கவனமா இருக்கணும்... திருடங்களை குறைச்சு இடை போடக்கூடாது..."
"சரிங்க, இனிமேல கவனமா இருக்கேன்... பணம் கொடுங்க பூ வாங்கணும்..." என்று கேட்டாள் திவ்யா.
பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுக்க முயன்ற மோகன் அதிர்ந்தான் . பர்ஸை காணவில்லை.
Saturday, May 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
No comments:
Post a Comment